25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


முன்னோர்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர்  கொடுப்பதன் காரணம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னோர்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர்  கொடுப்பதன் காரணம்?

நமது முன்னோர்கள் யார் வீட்டிற்கு வந்தாலும் குடிக்க தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள். புதிதாக வருபவர் தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும்  அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற நடைமுறை இருந்தது.இவ்வாறு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதற்கு மிகச் சிறந்த காரணங்கள் உள்ளது. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் அற்புதமான சக்தி இருக்கிறது. ஒரு மனிதனின் கோப தாபத்தையும், வெறுப்புணர்ச்சியையும் மாற்றும் ஆற்றல் தண்ணீருக்கு உள்ளது. ஏதாவது சண்டை சச்சரவு வரும்போது ஒருவரையொருவர் ஏச்சுப் பேச்சு நடத்தும் போது அவர்களை விலக்க வருபவர் முதல்ல தண்ணி குடிப்பா அப்புறம் பேசலாம்" என்று கூறுவார் சண்டையிடும் நபர் தண்ணீர் குடித்ததும், தனது பேச்சில் ஒரு வித சாந்தம் வெளிப்படும். இதன் அடிப்படையில்தான், வீட்டிற்கு வருபவர்களுக்கு, தண்ணீர் கொடுக்கும் பழக்கத்தை நமது முன்னோர் உருவாக்கினர் வீட்டிற்கு வருபவரின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி. தண்ணீரை குடித்தால், அந்த கெட்ட தாக்கத்தின் பாதிப்பு இல்லத்தை பாதிக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News