பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து.
இந்திய அணி, இன்று வியட் நாமை பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து முதல் போட்டியில் ,எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
பெண்க ளுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வதுசீசன்,ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன.
மூன்று பிரிவில் முதல் இரு இடம் பெறும் 6, ஒவ்வொரு பிரிவில் 3வது இடம் பெற்ற சிறந்த 2 என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் 6 அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம்.
2003க்குப் பின் ஆசிய கோப்பை அரங்கில் இந்தியா, வியட்நாம் அணிகள் மோதுகின்றன.
இரண்டு போட்டியிலும் முன்னதாக மோதிய வியட்நாம் 3-0,2-1 என வென்றுள்ளது.
இன்று இந்தியா வென்றால், உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
0
Leave a Reply