ஆசிய கோப்பை பைனலுக்கு ,பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' இந்தியா அணி முன்னேறியது.
ஆசிய கோப்பை பைனலுக்கு ,பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' இந்தியா அணி முன்னேறியது. அரை யிறுதியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை 'ஏ' அணியை வென்றது.
வளர்ந்து வரும் பெண் களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பைகிரிக்கெட் 2வது சீசன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் "நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ' அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை 'ஏ' அணி 19.4 ஓவரில், 118 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
இந்தியா 'ஏ' அணி 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராதா யாதவ், ஆட்ட நாயகி விருது வென்றார்.
வங்கதேச 'ஏ அணி (110/8), 54 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் 'ஏ' அணியை (56/10) மற்றொருஅரையிறுதியில் வென்றது. நாளை நடக்கவுள்ள பைனலில், இந்தியா 'ஏ', வங்கதேச 'ஏ' அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை (2023) இவ்விரு அணிகள்மோதிய பைனலில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பைவென்றது.
0
Leave a Reply