நன்மையை தரும் விளாம்பழம் (Wood Apple )
விளாம்பழம். இதை ஆங்கிலத்தில் Wood Apple அல்லது Stone fruit என்பார்கள். இந்த பழம் எல்லா காலங்களில் கிடைக்காது. இது ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.இதன் மேல் ஓடு போன்று இருக்கும். அதை உடைத்தால் அதில் ஒரு பல்ப் (pulp)இருக்கும். அந்த சதை பகுதியான பல்ப்பை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா. அதை சிறிது வெல்லத்தை பொடித்து நன்கு கைகளால் பிசைந்தால் பஞ்சாமிர்த பதத்திற்கு வரும். அதை அப்படியே ஸ்பூனாலோ அல்லது கைகளாலோ சாப்பிட்டால் பஞ்சாமிர்தம் திடீரென தேவாமிர்தமாக மாறிவிடும்.
இது புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெல்லத்தூள் சேர்க்கிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி என கருதி பலர் தவிர்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனையாகும் இந்த பழத்தை வாங்கி விநாயகருக்கு படைத்துவிட்டு குப்பையோடு குப்பையாக வீசி விடுகிறார்கள்.
இது பசியை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தை நீக்கிவிடும். இதனால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்சினைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். வெள்ளைப்படுதலை நீக்கும், மாதவிடாய் அதிக ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, சீதபேதியை நிறுத்தும்.. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக அமைகிறது.
0
Leave a Reply