25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக பாரா வில்வித்தை: ஷீத்தல் தேவி மீது எதிர்பார்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாரா வில்வித்தை: ஷீத்தல் தேவி மீது எதிர்பார்ப்பு.

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது கட்டப் போட்டிகள் இன்று இந்தியாவில் தொடங்குகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஷீத்தல் தேவி பங்கேற்கிறார். நடப்பு உலக சாம்பியனும், காம்பவுண்டு பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையுமான 19 வயது ஷீத்தல் தேவி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர்-1 வீரரும், நடப்பு சாம்பியனுமான தோமன் குமார், ராகேஷ் குமார் ஆகியோர் களமிறங்குகின்றனர். ரீகர்வ் பிரிவில் ஹர்விந்தர் சிங்கும் போட்டியிடுகிறார்.

மேலும், செக் குடியரசின் சர்கா பல்டர் முசிலோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்பதால் போட்டியில் கடும் சவால் நிலவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News