டில்லியில் இன்று துவங்க உள்ள உலக பாரா தடகளம் . இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர்.
உலக பாரா தடகளசாம்பியன்ஷிப் டில்லியில் இன்று துவங்குகிறது சொந்த மண்ணில் பதக்க வேட்டை நடத்த இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி சார்பில், நடத்தப்படுகிறது. இதன் 12வது சீசன் டில்லி, நேரு மைதானத்தில் இன்று துவங்குகிறது. வரும் அக். 5 வரை நடக்கும். 104 நாடு களில் இருந்து 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
101 ஆண்கள், 84 பெண்கள், ஒரு கலப்பு போட்டி என மொத்தம் 186 பிரிவு களில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
ஈட்டி எறிதலில் பாராலிம்பிக் சாம்பியன், நடப்பு உலக சாம்பியன் சுமித் அன்டில், பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்) இந் தியாவுக்கு தங்கம் வென்று தரலாம். இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply