உலக வறுமை ஒழிப்பு தினம்.
உணவு, உடை, குடிநீர், இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் சமூகப் பாதுகாப்பும் கிடைக்கப் பெறாதவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். உலகில் கோடிக்கணக்கான மக்கள் தீவிர வறுமையில் வாழ்கின்றனர். வறுமையால் பாதிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரெசின்ஸ்கி வலியுறுத்தினார். இவரது முயற்சியால், 1987 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பான வாழ்விடமும் கிடைக்கச் செய்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
0
Leave a Reply