உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்று வரலாறு படைத்த விஷ்வஜித்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் விஷ்வஜித் மோர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான கிரிகோ–ரோமன் மல்யுத்தத்தின் 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற விஷ்வஜித், சிறப்பாகச் செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் கிரிகோ–ரோமன் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜார்ஜியாவின் கோபா கருமிட்சை எதிர்கொண்ட விஷ்வஜித், கடைசி வரை கடுமையாகப் போராடினார். இருப்பினும், 12–13 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் இப்போட்டியில் கிரிகோ–ரோமன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் விஷ்வஜித் படைத்தார்.
0
Leave a Reply