உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி விஷ்வஜித் வரலாற்றுச் சாதனை.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் விஷ்வஜித் மோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இத்தொடரில் முதலில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் விஷ்வஜித் மோர் களமிறங்கினார்.
முதல் சுற்றில் மெக்சிகோவின் மரினை 10-8 என்ற கணக்கில் வீழ்த்திய அவர், காலிறுதியில் ஆர்மினியாவின் சாடியை 8-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில் ரஷ்யாவின் மாலிக் டிடியேவை எதிர்கொண்ட விஷ்வஜித், 7-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதன் மூலம், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் கிரிகோ ரோமன் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஜூனியர் பிரிவில் ஏற்கெனவே இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ள விஷ்வஜித், இறுதிப்போட்டியில் ஜார்ஜியாவின் கோபா கருமிட்சை எதிர்கொள்ள உள்ளார்.
0
Leave a Reply