உலகின் விலை உயர்ந்த பொருள் Costly Elements
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமம் ஃபிரான்சியம். இதன் விலை ஒரு கிராம் ரூ.8,313 கோடி ஆகும். இதன் ஆயுட்காலம் வெறும்22 நிமிடங்கள் மட்டுமே. அதாவது22 நிமிடங்களுக்கு பிறகு இது மற்றொரு உலோகமாக மாறிவிடும். இது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் இது உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக உள்ளது.
காலிஃபோர்னியா என்பதும் ஃபிரான்சியத்தை போலவே மிகவும் விலை உயர்ந்த கனிமம் ஆகும். இது கடந்த1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு பிறகு சில கிராம்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கிராமின் மதிப்பு ரூ.2.22 ஆகும். இந்நிலையில் இது ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்கப்படுகிறது.
கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். இது அனைத்து உயிரினங்களிலும் காணப்படும். ஆனால் இதன் விலை கிராபைட்டை விட மிக அதிகமாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராம் ரூ.54 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியமும் விலையுயர்ந்த தனிமங்களின் பட்டியலில் ஒன்றாகும். புளூட்டோனியம்239 மற்றும்241 ஆகியவை அதிக கதிரியக்கம் கொண்டவை. இவற்றை சேமித்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் இவை எளிதில் தீப்பற்றக்கூடியவை. இதன் விலை ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் ஆகும்.
ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இது மிகவும் அரிதானது. அலுமினிய உலோக கலவைகளில் அதன் விளைவு முதன்முதலில்1970ல் கவனிக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக இது இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு கிராம் விலை ரூ.22,000 ஆகும்.
லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகங்களில் ஒன்றாகும். இதன் வணிக பயன்பாடு குறைவு என்றாலும் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கிராம் ரூ.57,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது
பிளாட்டினம் மிகவும் வினைத்திறன் கொண்ட உலோகம். இது அதிக வெப்பநிலையிலும் துருப்பிடிக்காது. ஆனால் இவை பூமியில் காணப்படுவது அரிது. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உறப்த்தி செய்யப்படுகிறது. இது ஒரு கிராம் ரூ.48,0000க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகைகளில் பயன்படுத்தப்படும் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் ஒன்றாகும். இதற்கு உலகம் முழுவதும் அதிக தேவை உள்ளது. இது விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0
Leave a Reply