தயிர் வெங்காயம் ருசியாக இருக்க
தயிர் வெங்காயத்திற்கு வெங்காயம் தோலை உரித்து விட்டு,வெங்காயத்தை கழுவி பின் வெட்டவும்.வெட்டிய பின் வெங்காயத்தை கழுவினால் தயிர் வெங்காயம் ருசியாக இருக்காது.
ரசத்திற்கு மிளகு சீரகம் பூண்டை இடித்து போட்டு ரசம் வைத்தால் ரசம் வீடே கமகமக்கும் .
சட்னிக்கு குழம்புக்கு வெங்காயம் தக்காளியை ஒன்றாக போட்டு வதக்க கூடாது வெங்காயத்தை வதக்கிய பின் தக்காளியை வதக்கினால் வெங்காயம் பச்சை வாசனை வராது.
தயிர்சாதம் செய்யும் போது அதிக பால் ஊற்றி கொஞ்சம் தயிர் சேர்த்து கிளறவும் அப்பதான் தயிர்சாதம் புளிக்காமல் இருக்கும் கிளறும் போது கொஞ்சம் தண்ணியாக கிளறினால் தான் சாதம் சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும்.
அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த மாவு ஒரு வாரம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் அப்படியே இருக்க வேண்டும் என்றால் , மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் பொழுது ஒரு வெற்றிலையை அதில் போட்டு வைத்து விடுங்கள்.வெற்றிலையை போடும் போது அதன் காம்பு பகுதி மாவின் உள்ளே இருக்கும் படி போட்டுக் விடுங்கள். இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் ஒரு வாரம் கூட மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.
0
Leave a Reply