25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM –YASASVI கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM –YASASVI கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் .

 இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC,  & DNT students  கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal)  விண்ணப்பிக்கலாம்.

 இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.  2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  பட்டியலிடப்பட்ட ( Top Class Schools)  பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை  வழங்கப்பட உள்ளது.

 இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு  ரூ. 2.50 இலட்சம்,

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 31.10.2025

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ள நாள்:15.11.2025

 புதுப்பித்தல்:

                இத்திட்டத்தின் கீழ் கடந்த  நிதியாண்டில் பயனடைந்த  மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National   Scholarship Portal) Renewal Application  என்ற இணைப்பில் (Link)   சென்று OTR  Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல்                     ( Renewal)  மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.


புதியது:  

                இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR  Number & Password  பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

  மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application)  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய  முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம்.

 கல்வி நிறுவனங்கள் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்  பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும்.  அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential  சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். 

 இத்திட்டம் தொடர்பான கூடுதல்  விபரங்கள் அறிந்திட தேசிய கல்வி உதவித்தொகை  NSP (https://scholarships.gov.in) இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News