25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த, இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANADA)  நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த, இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANADA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக  கேபின் க்ரூவ்  (Cabin Crew), விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, (Air Cargo Introductory+ DGR) பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி, (Foundation in Travel and Tourism) மற்றும் போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பி பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canada மூலம் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

 மேலும், பயிற்சி சான்றிதழ் உள்ளவார்கள் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/-முதல் ரூ.22,000/- வரைபெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/-  முதல் ரூ.70,000/-  ஊதிய உயர்வு பெறலாம்.

 இதனால் வரை தாட்கோ மூலம்  விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களான  Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange  போன்ற விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பயிற்சியில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com)  என்ற முகவரியில் பதிவு செய்ய  வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News