சுண்டக்காய் சூப்
சுண்டக்காய் பித்தக் கோளாறுகள் அகற்றும், இரத்த ஓட்டத்தைச் செம்மைப்படுத்தும். வயிற்றிலுள்ள கீரைப் பூச்சிகளை அழித்து குடலைச் சுத்தப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் - 20கிராம்
லவங்கப்பட்டை-1, லவங்கம் -1,
பெரிய வெங்காயம் - 4,
பெரிய தக்காளி - 2, பால் - 200மி.லி,
தேங்காய்ப்பால் -100மி.லி,
மிளகு - 5கிராம்,
நெய் - ஒரு மேசைக்கரண்டு,
உப்பு - தேவைக்கேற்ப
பயத்தம் பருப்பு - 25 கிராம்
செய்முறை
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பில் வைக்கவும். அது காய்ந்ததும் சுண்டைக்காய்களைப் போடவும் இலேசாக வதக்கியதும் இறககி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு லிட்டர் தண்ணீர் விடவும் தண்ணீர் சூடானதும் பருப்பைப் போடவும் பருப்பு வெந்ததும் சுண்டக்காய்களைப் போடவும். காயும் பருப்பும் கரைந்து போகும் அளவு கொதிக்க விடவும் தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கவிடவும்
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய்யை விடவும் நெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவந்து வந்ததும் லவங்கப்பட்டையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி, வேக வைத்த சுண்டைக்காய் பால், தேங்காய்ப் பால் ஆகிய அனைத்தையும் விட்டு ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்உப்பு, மிளகு இரண்டையும் பொடி செய்து போட்டுக் கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து தெளிவாக வடிகட்டி சூடாக அருந்தவும்.
0
Leave a Reply