செஸ் ஒலிம்பியாட் – இந்திய ஆண்கள் அணிக்கு 5-வது வெற்றி!
.உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
ஓபன் பிரிவின் 5-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.
இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் குகேஷ், எர்வின் ஐ'அமியை தோற்கடித்தார்.
அர்ஜுன் எரிகைசி மற்றும் நிஹால் சரின் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர்.
முடிவில் இந்திய அணி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்தது.
பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.
பெண்கள் பிரிவில் திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பி மற்றும் வந்திகா அகர்வால் ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர்.
முடிவில் இந்திய பெண்கள் அணி 1.5–2.5 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
0
Leave a Reply