தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது
“கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
2024-25-ம் நிதி ஆண்டிற்கு “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு செப்டம்பர் - 2024, 13 முதல் 17 வரை ஊராட்சி அளவிலும் மற்றும் செப்டம்பர் - 2024, 18 முதல் 23 வரை வட்டார அளவிலும், பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு வட்டாரம்/மாவட்ட அளவில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது.
எனவே இப்போட்டிகளில் சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம். வட்டார அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply