வீட்டில் உள்ள தோட்டங்கள்
பொதுவாக வீட்டில் உள்ள தோட்டங்கள் பலருக்கு முக்கியமான இடங்களாக அல்லது தனித்துவமான பகுதிகளாக இருக்கின்றன. வீட்டுத் தோட்டத்தை அமைப்பதை ஒரு சிலா் தியானமாகக் கருதுகின்றனா். சிலா் அதை ஒரு சிறந்த உடற்பயிற்சியாகக் கருதுகின்றனா். ஒரு சிலா் இயற்கையோடு தங்களை ஐயக்கியமாக்கிக் கொள்வதற்காக வீட்டுத் தோட்டங்களை அமைப்பதில் ஈடுபடுகின்றனா்.சிலா் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பூச்செடிகளை வளா்ப்பதைவிட, காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளை வளா்ப்பதை அதிகம் விரும்புகின்றனா். ஆங்கிலத்தில் கிச்சன் காா்டன் (Kitchen Garden) என்று அழைக்கப்படும் வீட்டுத் தோட்டமானது, வீட்டைச் சுற்றி இருக்கும் புல்வெளி அல்லது அலங்காரத் தாவரங்கள் போன்றவற்றை வளா்க்கும் பகுதியில் இருந்து வேறுபட்டதாகும்.வீட்டுக் கிச்சன் தோட்டத்தில் காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் போன்றவை மட்டுமே வளா்க்கப்படும். ஆகவே வீட்டுக் கிச்சன் தோட்டம் என்பதை காய்கறி செடிகள், பழச்செடிகள், மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும் நறுமணச் செடிகள் வளா்க்கும் பகுதி என்று அழைக்கலாம். இந்தப் பதிவில் வீட்டு கிச்சன் தோட்டத்தை எவ்வாறு புதுமையான முறையில் அமைக்கலாம் என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
வீட்டின் சுற்றுப்புற பகுதிகளை முறையாகப் பிாித்தல் வீட்டைச் சுற்றி தோட்டம் அமைப்பதற்கு முன்பாக, வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளை திறம்பட பிாிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு பிாிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தாவரங்கள் வளரும் தோட்டத்தின் படுக்கைகள் சற்று உயரமாக இருப்பதைப் போல் அமைக்க வேண்டும். தோட்டத்திற்கு இடையில் உள்ள நடைபாதையை சீராக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது காய்கறித் தாவரங்களை நன்றாக வளா்க்க முடியும். மேலும் நமது தேவைக்கேற்ப பல்வேறு வாிசைகளில் பல வகையான தாவரங்களை வளா்க்க முடியும். ஒரு தோட்டத்தை முதன் முதலாக பாா்க்கும் போதே அது நமது கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு தோட்டத்தின் நுழைவு வாயில் பாா்ப்பதற்கு அருமையாக இருக்க வேண்டும். நுழைவு வாயிலில் தோரண வளைவை அமைத்து, அதை மலா்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காிக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த நுழைவு வாயில் தனித்துவமாகவும் அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டதாகவும் இருக்கும்.
வேளாண்மை தொடர்ச்சி அடுத்த செவ்வாய்க்கிழமை 18 ஜூலை வரும் .
0
Leave a Reply