25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்கிறீர்களா?  நீங்கள் வரும் வரைக்கு உங்கள் வீட்டு செடிகளை பட்டு போகாமல் எப்படி பாதுகாக்கலாம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்கிறீர்களா? நீங்கள் வரும் வரைக்கு உங்கள் வீட்டு செடிகளை பட்டு போகாமல் எப்படி பாதுகாக்கலாம்?

கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியூர் செல்கிறீர்களா?  . நீங்கள் வரும் வரைக்கு உங்கள் வீட்டு செடிகளை பட்டு போகாமல் யார் பார்த்து கொள்வார் என்று புலம்புவது உண்டு.வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் நீங்கள் இல்லாமல் தினசரி எளிதாக நீர் பாய்ச்சவும் முடியும்.நீர் பாய்ச்சுதல் நீங்கள் விடுமுறையில் இருக்கும் போது உங்கள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்பது கஷ்டமான விஷயம். வெளிப்புற மற்றும் உட்புற தாவரங்களை இந்த வெயிலுக்கு விட்டுச் செல்லும் போது ஆழமான நீர்ப்பாசனம் அவசியம். எனவே இதற்கு நீங்கள் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தலாம்.தொட்டியில் உள்ள மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க இந்த சொட்டு நீர் பாசன முறை உதவுகிறது. இதற்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் ஒரு ஓட்டை போட்டு அதில் டுயூப்பை சொருகி தலைகீழாக தொங்க விட்டு சொட்டு சொட்டாக தண்ணீர் சிந்தும் படி வைக்கலாம்.

 இதன் மூலம் செடிக்கு தினசரி தண்ணீர் தேவை பூர்த்தியாகும். நீங்கள் வரும் வரைக்கு செடி வாடிப் போகுமே என்ற கவலை கிடையாது. மேலும் தொட்டியில் கூலாங்கற்களை போட்டு வைப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாத்து வைக்கும். போகும் முன்பு செடியை நிழலில் வைத்து செல்வது முக்கியம். அதிகப்படியான சூரிய ஒளியில் இருப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செடியை சீக்கிரமே காய்ந்து போக வைத்துவிடும். எனவே தொட்டியை தூக்கி நிழலான இடத்தில் வைப்பது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை நீண்ட நேரம் காக்க உதவி செய்யும். ஒரு சில நாட்களுக்கு தாவரங்களை வெயில் படாதபடி வைத்து செல்லுங்கள். சுய நீர்ப்பாசன சாதனங்களை பயன்படுத்தலாம் செடிகளுக்கு தானாகவே தண்ணீர் செலுத்த நீர் ஸ்பைக் சாதனங்களை பயன்படுத்தலாம். கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதை தலைகீழாக வைத்து இந்த ஸ்பைக் சாதனத்தை மாட்டினால் போதும் தண்ணீர் சொட்டு சொட்டாக செடிகளுக்கு எளிதாக பாய ஆரம்பித்து விடும். மேலும் கண்ணாடி குளோப்களை பயன்படுத்தியும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இந்த கண்ணாடி குளோப்களில் தண்ணீரை நிரப்பி தலைகீழாக தொட்டியில் வைக்கலாம். இதன் மூலமும் சொட்டு சொட்டாக தண்ணீர் பாய்ச்ச முடியும்.

காட்டன் ரோப் நீர்ப்பாசன முறை இந்த முறையை செய்வதற்கு ஒரு வாளி நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது காட்டன் கயிற்றின் ஒரு முனையை வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். மற்றொரு முனையை செடி உள்ள தொட்டியில் வைக்கவும். காட்டன் கயிறு தண்ணீரால் நனைந்து மெல்ல மெல்ல தண்ணீர் செடிகளுக்கு செல்லும். நீங்கள் வரும் வரைக்கு தொட்டியில் உள்ள மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். தொட்டியில் ஈர வைக்கோலை போட்டு வையுங்கள் நீங்கள் ஊருக்கு போகும் போது தொட்டியில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாக்க ஈர வைக்கோலை படுக்கை மாதிரி போட்டு வைக்கலாம். இது மண் சூரிய ஒளியால் சீக்கிரம் காய்ந்து போகாமல் தடுக்க உதவுகிறது. இப்படி போட்டு வைப்பதன் மூலம் தொட்டியில் களைச் செடிகள் வளருவதை தடுக்க முடியும். மேலும் தொட்டியின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், வேர்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News