அரிதாக கிடைக்கும் பழ சாகுபடியில் கைநிறைய பணம் சம்பாதிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியர்
ஓரிடத்தில் அரிதாக கிடைக்கும் ஒரு பொருளை நாம் உருவாக்கி விற்பனை செய்யும் போது குறுகிய காலத்திலேயே அது நல்ல லாபத்தை பெற்று தரும். அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டு பெரிய தொழில் முனைவோராக மாறி இருக்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருஇளைஞர்.கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் சேத்தன் ஷெட்டி. மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பெங்களூருவில் சேல்ஸ் பிரிவில் தலைமை பொறுப்பு வகித்து வந்தார்.சேத்தன் ஷெட்டியின் குடும்பத்தினர் மங்களூர் பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். விடுமுறை நாட்களில் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவது வாடிக்கை. அப்படி விவசாயத்தின் மீது ஆர்வம் பிறந்துள்ளது. முதல்கட்டமாக ஊரில் தங்களுடைய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். இது இவருக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. எனவே தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார். இந்தியாவில் அரிதாக கிடைக்கக்கூடிய பழங்களை நாம் விளைவித்து விற்பனை செய்யலாம் என்று யோசனையும் இவருக்கு பிறந்துள்ளது. எப்பொழுது விடுமுறைக்காக ஊருக்கு சென்றாலும் அதிகப்படியான நேரம் விவசாய நிலத்திலேயே இருந்து உதவிகளை செய்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தன்னை நன்றாக பழகிக் கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நிலத்தில் மஞ்சள் பயிரிட்டார். முதலில் அவருக்கு165 கிலோவிற்கு மஞ்சள் அறுவடை நடைபெற்றது. அதனை மஞ்சளாகவே விற்பனை செய்யாமல் மஞ்சள் பவுடராக மாற்றி ஒரு கிலோ450 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு நல்ல லாபத்தை தந்தது.2017 ஆம் ஆண்டு வேலையை விட்டு சொந்த ஊருக்கே திரும்பிய அவர் தன்னுடைய ஊரில் இன்னும் கூடுதலாக நிலங்களை வாங்கி நான்கு ஏக்கர் பரப்பளவில் ரம்புட்டன்),மேங்கோஸ்டின்அவகேடோ மற்றும் பப்பாளி ஆகிய ஆகியவற்றை பயிரிட்டார்., ஒரு ரம்பூட்டன் மரக்கன்றின் விலை 350 ரூபாய் என்றும் கூறுகிறார்.
பொதுவாக35அடி இடைவெளியில் தான் ரங்புட்டன் கன்றுகளை நட வேண்டும் என்பது விதி ஆனால் அதனை சற்றே மாற்றி அமைத்து 15அடி இடைவெளியில் இவர் பயிரிட்டுள்ளார். இந்தியாவில் பொதுவாக ரம்புட்டன் என்பது மலேசியா தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சேத்தன் இதனை இந்தியாவிலேயே விளைவித்ததால் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு இவரது விவசாயம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு கூடுதலாக100 ரம்புட்டன் மரங்களை நட்டு இருப்பதாகவும் இது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் விளைச்சலை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரம்புட்டன், அவகேடோ ஆகியவற்றுடன் வெண்ணிலா, மேஸ் பிளவர் என பல வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். இயற்கையானமுறையில்தாங்கள்விளைவிப்பதால்வாடிக்கையாளர்களுடைய நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்
0
Leave a Reply