மான்செஸ்டர் டெஸ்டில் கிரிக்கெட் .
கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர் சதம் அடித்து ,மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடி இந்திய அணி, 'டிரா' செய்தது.இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது.இங்கிலாந்து 669 ரன் குவித்து, 311 ரன் முன்னிலை பெற்றது. நான்காவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்த அணி 174/2 ரன் எடுத்து, 137 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 425/4 ரன் எடுத்தது.ஜடேஜா (107), வாஷிங்டன் (101) அவுட் டாகாமல் இருந்தனர்.தற்போது 'ஆண்டர்சன் -சச்சின் டிராபி' தொடரில், இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலையில் உள்ளது.
0
Leave a Reply