கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டாரங்களைச் சேர்ந்த 81 பயனாளிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை (31.07.2026) வழங்கினார்.
வருவாய்த்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நில உடைமை பதிவு ஆவணமான கிராமக்கணக்குகளுக்கும், தமிழ்நிலம் இணையதளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை களைந்து பட்டா வழங்கக் கோரி பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெறுவதால், சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு வருவாய்க் கோட்டாட்சியர்கள் / வட்டாட்சியர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், (31.07.2026) அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்ட அளவிலான சிறப்பு முகாம், அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், அருப்புக்கோட்டை வட்டத்தில் 30 நபர்களுக்கும், காரியாபட்டி வட்டத்தில் 29 நபர்களுக்கும், திருச்சுழி வட்டத்தில் 22 நபர்களுக்கும், மொத்தம் 81 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உத்தரவு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், இது போன்று ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள்/விடுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை புதிய வடிவிலான படிவத்தில் தயார் செய்து உத்தரவுகள் பிறப்பிக்குமாறும், முன்பாக உரிய கள விசாரணை செய்து அறிக்கை செய்யப்பட வேண்டுமென சார்நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்.
தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து தீர்வு காண முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply