உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகமாகச் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார்..தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை. தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ (Google CEO) என்ற பதவியைப் பெற்றார் இவர். குறிப்பாக சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. அதேபோல் 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1800 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.
பின்பு கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்குச் சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது. குறிப்பாக இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டுவரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.
டாலர்கள் அல்லது ரூ.10215 கோடி என ஹூருன் பட்டியலில் ( Hurun List) மதிப்பிடப்பட்டு இருந்தது . அதேபோல் சமீபத்தில் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
0
Leave a Reply