செல்வமகள் சேமிப்பு திட்டம்..( சுகன்யா சம்ரித்தி யோஜனா )
பொதுமக்களின் நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய முக்கியமான திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமண தேவைகளுக்கு பயன்படும் வகையில் இந்த சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம். இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலாம் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில்21 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய திட்டமாக உள்ளது.
10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தை தொடங்கலாம். திட்டம் தொடங்கப்படும் ஆண்டு முதல் அடுத்த21 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு18 வயது நிறைவடைந்ததும் திருமணம் அல்லது கல்வி செலவிற்காக பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.மாதம் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.250 மூதல் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.1,50,000லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்யலாம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80c-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், ஏப்ரல் முதல் மார்ச் வரை ஒரு நிதியாண்டாக கருதப்படுகிறது. இந்த கணக்கை தொடங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையெனில் கணக்கு செயலிழந்துவிடும். அதன் படி இந்த ஆண்டுக்கான டெபாசிட் செய்ய இந்த மாதம்.மார்ச்31ஆம் தேதிக்குள் ரூ.250 செலுத்தவில்லை என்றால் கணக்கு செயலிழந்து விடும். எனவே இந்த ஆண்டு சேமிப்பு கணக்கில் ஒரு ரூபாய் கூட செலுத்தாதவர்கள் இந்த மாத இறுத்திக்குள் தொகையை செலுத்தி கணக்கை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கணக்கு செயலிழந்துவிடும்.
0
Leave a Reply