நுண் ஊட்டச்சத்து உள்ள வைட்டமின் டி கைக்குழந்தைகளுக்கு அவசியம் தேவை.
உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி அவசியம் தேவை. கால்சியம் சத்து மனிதர்களின் எலும்பு உறுதியாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் தசைகளின் உறுதிக்கும் நரம்புகளின் பணிகளுக்கும் பயன்படுகிறது. இது சூரிய ஒளியில் இருந்து எளிதில் கிடைக்கக்கூடியது. சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் குழந்தையின் சருமத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போது அது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தை அளிக்கிறது.
வைட்டமின் டி சத்து குழந்தைகளுக்குக் குறையும்போது அது பலவிதமான ஆரோக்கிய கேடுகளைத் தரும். ரிக்கெட்ஸ் நோய், தசை பலவீனம், எலும்பு முறிவுகள், வலி போன்றவற்றைக் கொடுக்கும்.
வைட்டமின் டி குறைபாட்டால் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் குழந்தையின் உயரம், எடை மற்றும் வளர்ச்சி போன்றவற்றில் தாமதம் ஏற்படுவது.
குழந்தை மந்தமாக இருக்கும். விரைவில் எரிச்சல் அடையும்.
விளையாடும்போது கீழே விழுந்தால் எளிதாக எலும்பு முறிவு ஏற்படலாம்.
தசைகள் பலவீனமாக இருக்கும். தாமதமான பல் வளர்ச்சி இருக்கும்.
இவர்களுக்கு வைட்டமின் டி சொட்டு மருந்து, சிரப் போன்றவற்றை கொடுக்கலாம். மேலும், பிள்ளைகளை காலை, மாலை என இரு வேளைகளில் சூரிய ஒளி உடலில் நேரடியாகப் படும்படி வைக்க வேண்டும்.
0
Leave a Reply