”மக்களுடன் முதல்வர்”
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,” கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
”மக்களுடன் முதல்வர்” திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S.அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0
Leave a Reply