மதுரை முக்கிய முதலீட்டுத் தளமாக மாறப் போகிறது
கடந்தஒருமாதத்தில்அடுத்தடுத்துமுக்கியமானஅறிவிப்புவெளியாகிமதுரைமக்களைமனம்குளிரவைத்துள்ளது.தமிழ்நாட்டின் பட்ஜெட் அமைந்தது முக்கியமான விஷயமாக உள்ளது.தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி மற்றும் டெக் துறையில் கூடுதல் முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்க்கும் வகையில் மதுரையில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.4 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தைப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, மதுரையில் AIIMS மருத்துவமனை கட்டுமான பணிகளை லார்சன் & டூப்ரோ நிறுவனம் தொடங்கியுள்ளது, மதுரை மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தென் தமிழ்நாட்டுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
மதுரை AIIMS கட்டுமானத்தைச் சுமார் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. இந்தப் புதிய வளாகத்தில், 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் உடன் கல்லூரி, விடுதிகள், அலுவலகம் எனச் சகல வசதிகளும் கொண்டு இருக்கும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவியுடன் ரூ.1,978 கோடி மொத்த செலவில் மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தொப்பூர் பகுதியில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதி அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்குத் தமிழக அரசு டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 2வது பதிப்பான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மற்றும் தஞ்சாவூர் தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் 18 மாநகரங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மதுரையும், தஞ்சாவூர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது, இரண்டுமே கோவில் நகரம் என்பது கூடுதல் சிறப்பு. மதுரை மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு CITIIS 2.0 திட்டத்தின் கீழ் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீக்கதிர் பாலம் மற்றும் சமயநல்லூர் சந்திப்பு இடையே இருக்கும் 8 கி.மீ. நீளம் கொண்ட வடக்கு ஆற்றங்கரை சாலையைச் சுமார் 176 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மதுரை மீது இருந்த நீண்ட கால உள்கட்டமைப்பு சேவை பிரச்சனைகள் மெல்ல மெல்ல சீரடைந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஓரிரு வருடத்தில் மதுரை முக்கிய முதலீட்டுத் தளமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply