25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 க்கான  பயிற்சி வகுப்புகள் 27.05.2025-அன்று முதல் நடைபெறவுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 க்கான பயிற்சி வகுப்புகள் 27.05.2025-அன்று முதல் நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-ஐ க்கான தேர்வு 15.06.2025 அன்று நடக்கவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு 27.05.2025 அன்று சாத்தூர், ஸ்ரீ ராமசாமி நாயுடு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 03.06.2025 மற்றும் 07.06.2025 அன்று விருதுநகர், VHNSN கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறவிருக்கிறது.

 இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/7kG8jf2vAH2optL9A  என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.

 மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com  என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம். எனவே TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News