தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு *உணவு ஊட்டச்சத்தியல்* (Nutrition & Dietetics) மற்றும் *உடல் எடை சீரமைப்பு* (Slimming & Weight Loss Courses) ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:இனம்: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.குடும்ப வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும்.பயிற்சியின் விவரங்கள்:கால அளவு: 50 நாட்கள்.பயிற்சி மையங்கள்: இப்பயிற்சிகள் *இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்* நடைபெற உள்ளன.தங்கும் வசதி: தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கிப் படிப்பதற்கான முழுச் செலவினத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்:இப்பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் *ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை* வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.விண்ணப்பிக்கும் முறை:இப்பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தாட்கோ இணையதளம் (www.tahdco.com) வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் திடலில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026-னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புகையிலை நுகர்வினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் வழிவகுக்கிறது. ஏற்கப்பட்ட விழிப்புணர்வு உறுதிமொழி: அதன் ஒரு பகுதியாக, "இன்றைய தினம் நான் ஒருபோதும் புகைபிடிக்கவோ அல்லது புகையிலைப்பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என்றும், அவ்வாறு புகைபிடிப்பதற்கு அல்லது புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு என்னுடைய உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ ஊக்குவிக்க மாட்டேன் என்றும் நான் என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களைப் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், மேலும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதினால் ஏற்படும் மாசிலிருந்து எனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பங்களிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க, அனைவரும் அதனை ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. விழிப்புணர்வுப் பேரணி: இதனைத் தொடர்ந்து, மாரியம்மன் கோவில் திடலில் தொடங்கிப் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைக்க, மருத்துவப் பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திரு.செந்தில் குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில், தற்போது தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு *அழகுக்கலை* (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் *சிகை அலங்காரம்* (Diploma in Creative Hair Dressing Chemical Treatment Courses) ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: இனம்: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குடும்ப வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும். பயிற்சியின் விவரங்கள்: கால அளவு: 45 நாட்கள். பயிற்சி மையம்: இப்பயிற்சிகள் *திருச்சி மாவட்டத்தில்* நடைபெற உள்ளன. தங்கும் வசதி: தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கிப் படிப்பதற்கான முழுச் செலவினத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்: இப்பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாகச் சுமார் *ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை* வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். விண்ணப்பிக்கும் முறை: இப்பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தாட்கோ இணையதளம் (www.tahdco.com) வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தங்கள் நில உடமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்வது அவசியம் விவசாயிகள் அரசின் பல்வேறு நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் தங்களது நில உடமை விபரங்கள், அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை தவிர்த்திட விவசாயிகள் தங்கள் நில உடமை விபரங்களை ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் இணைப்பதற்கு வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை வணிகத் துறை சார்ந்த அலுவலர்களால் நில உடமை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவும் தங்கள் நில உடமை விபரங்களை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட தனித்துவமான தேசிய அளவிலான நில உடமை அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 94,682 விவசாயிகளில் 79,302 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர், மீதமுள்ள 15 ஆயிரத்து 450 விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் நடத்தும் முகாம்களில் அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.வரும் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி தொகை ((PMKISAN) பெறுவதற்கும் மற்றும் அரசின் நலத்திட உதவிகளை பெறுவதற்கு பயிர் காப்பீடு பதிவிற்கும், உரம் வாங்குவதற்கு, வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணம் பெறும் சூழ்நிலையில் இந்த எண் மிகவும் அவசியம் என்பதால் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (01.06.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பணியிடத்தில் விபத்து மரணமடைந்த திரு.அர்ச்சுணன்(லேட்) மற்றும் திரு.ரவிச்சந்திரன்(லேட்) ஆகிய 2 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித் தொகையாக ரூ.8 இலட்சம் வீதமும்,கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த திரு.கணேசன்(லேட்) மற்றும் திரு.சீத்தாராமன்(லேட்) ஆகிய 2 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடத்து விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும் என பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்த 4 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.26 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5-வது தளத்தில் (அறை எண்- 505) இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் 5-வது தளத்திலுள்ள (அறை எண்- 505) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது (Lending Plus Service Provide to MSME).சிவகாசி கிளை அலுவலகத்தில் (முகவரி:- 98/சி4 சேர்மன் சண்முக நாடார் ரோடு, 2 வது தளம், சிவகாசி, விருதுநகர் மாவட்டம் 626 123) குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறுகிறது. மாநில அளவில் நடப்பு நிதியாண்டின் கடன் இலக்காக ரூ.2125/- கோடியாக நிர்ணயத்து முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடன் இலக்காக ரூ.61.00 கோடி இலக்குடன் பணியாற்றி வருகிறோம். இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. (TIIC)யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் (Kalaingar Green Energy Scheme) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். கூடுதல் மானியமாக 10 சதவிகிதம் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 சதவிகிதம் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனபடுத்துவதற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 சதவிகிதம் வட்டிமானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் SC/ST தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவிகிதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு கிளை மேலாளர் - 9445023477, திட்ட அலுவலர்கள் - 9500301892, 8838195375, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு 25 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும் மற்றும் மாணவியர்களுக்கென 18 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் என மொத்தம் 48 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ / மாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET / JEE நுழைவுத்தேர்வுக்கான வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கான தகுதிகள்பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கீ.மீ. க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் /காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்(27.05.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திசை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S அவர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான "திசை" போட்டித் தேர்வு பயிற்சி முகாமின் நிறைவு விழா (27.05.2026) நடைபெற்றது.முக்கிய நிகழ்வுகள்:விருதுகள்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.கவிதைத் தொகுப்பு: மாணவர்களின் கவிதைத் தொகுப்பை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அமைச்சரிடம் வழங்கினார்.அமைச்சர் அறிவுரை: மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்; கைப்பேசியை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்."திசை" திட்டத்தின் சாதனைகளும் விவரங்களும் (ஆட்சியர் உரை):திட்டத்தின் நோக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் JEE, NEET, CUET போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் வென்று, நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் (IIT, AIIMS, NIT) பயில வழிவகை செய்தல்.பயிற்சி விவரம் (2026):முதற்கட்டம்: 12-ஆம் வகுப்பு முடித்த 310 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் NEET / CUET பயிற்சி அளிக்கப்பட்டது.இரண்டாம்கட்டம்: தற்போது 11-ஆம் வகுப்பு முடித்த 613 மாணவர்களுக்கு (186 மாணவர்கள், 427 மாணவிகள்) மே 1 முதல் 27 வரை சிறப்பு உண்டு உறைவிடப் பயிற்சி வழங்கப்பட்டது.விண்ணப்பங்கள்: இவ்வாண்டு இத்திட்டத்தின் மூலம் 207 பேர் CUET தேர்விற்கும், 455 பேர் JEE Main தேர்விற்கும், 447 பேர் NEET தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளனர்.சாதனை: 15 நாட்கள் சிறப்புப் பயிற்சியின் மூலம் இதுவரை 11 அரசுப் பள்ளி மாணவர்கள் JEE Advanced தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் பங்களிப்பு: மாவட்டத்தின் 605 ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தன்னார்வமாக வழிகாட்ட முன்வந்துள்ளனர்.அடுத்தகட்ட நடவடிக்கை: ஜூன் 2026 முதல் கல்வியாண்டு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரித் தேர்வுகள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் சிறப்பு வகுப்புகள் தொடரும்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக், முதன்மைக் கல்வி அலுவலர் கு.அரவிந்தன் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.