தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 896 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (09.09.2024) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2687 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 896 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.79 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அருப்புக்கோட்டை வட்டாரத்தில், 56 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.290.20 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் வட்டாரத்தில், 59 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.508.60 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டாரத்தில், 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.303.78 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டாரத்தில் 59 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.414.52 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தில் 87 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.578.75 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டாரத்தில் 55 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.328.09 இலட்சம் மதிப்பிலும்,
நரிக்குடி வட்டாரத்தில் 37 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.228.10 இலட்சம் மதிப்பிலும், வத்ராயிருப்பு வட்டாரத்தில் 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.211.67 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் வட்டாரத்தில் 75 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.677.50 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 73 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 413.24 இலட்சம் மதிப்பிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 51 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.326.96 இலட்சம் மதிப்பிலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் 260; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.98 கோடி மதிப்பிலும் என மொத்தம் 896 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64.79 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வம், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply