25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 27, 2024

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண் பொறியியல் துறையின் மூலமாக  (26.07.2024) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளாவினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S அவர்கள்  துவக்கி வைத்தார். வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு  உழவு பணிகளில்  ஈடுபடுத்த இயலும்.டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகள்,  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, உயவுப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்டவை பற்றியும்  விவசாயிகள் அனைவரும் அறிந்து கொண்டார்கள்.வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும்  பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், இம்முகாம் இன்று நடைபெற்றது.பின்னர், இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள் டிராக்டர்களுடன் உபகரணங்களைப் பொருத்தி இயக்கிடும் செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தார்கள்.மேலும், வேளாண்மைப் பொறியியல்துறையில்  பணித்தளத்திலேயே  பழுதுநீக்கம் செய்து தரும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் தங்களது சந்தேகங்களை விவசாயிகள் நேரில் கலந்துரையாடி தெரிந்து கொண்டார்கள் என மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்    திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைத்துறை செயற்பொறியாளர்கள்,   உதவி பொறியாளர்கள்,வேளாண் பொறியியல் மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 27, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்  (26.07.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.பயிர் விளைச்சல் போட்டியில் பருத்தி பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சாத்தூர் விவசாயிக்கு காசோலையாக ரூ.15000/-ம், இரண்டாம் பரிசு பெற்ற விவசாயிக்கு காசோலையாக ரூ.10000/-ம் கம்பு பயிரில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சாத்தூர், விவசாயிக்கு காசோலையாக ரூ.10000/-ம், வழங்கப்பட்டது.மேலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (தோட்டக்கலை பயிர் விரிவாக்கம்- தென்னை) தலா ரூ.4800/- வீதம் மானியத்தில்  தென்னங்கன்றுகள் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (காய்கறி பயிர் விரிவாக்கம்- தக்காளி) ரூ.8000 மானியத்தில்  தக்காளி குழித்தட்டு நாற்றுகள் விவசாயிக்கு வழங்கப்பட்டது.கண்மாய்கள் மற்றும்; ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில்  அப்பகுதிக்குரிய  செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,சீமைக் கருவேல மரங்களை  அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குள் காட்டுப்பன்றிகள் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் எனவும்,வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும்   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள்; உட்ப பலர் கலந்து கொண்டனர்.  

Jul 27, 2024

சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்கசாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்

சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்கசாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் (26.07.2024) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சௌ .சங்கீதா I A S., அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.கே.அர்விந்த் இ.கா.ப., அவர்கள், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அவர்கள், ஆகியோர் உடன் உள்ளனர்.

Jul 26, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தினை பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 24.07.2024    அன்று அறிவியல் களப்பயணத்திற்கு அனுப்பப்பட்ட 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தினை பார்வையிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.மேலும், மாவட்டத்தில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தினை பார்வையிட்டனர்.இந்த அறிவியல் பயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவின் முக்கிய மையமாகும். இங்கு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள் மற்றும் ஒலி எழுப்பும் ராக்கெட்டுகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், இந்த மையம் ஏவுகணை வடிவமைப்பு, உந்துசக்திகள், திட உந்துவிசை தொழில்நுட்பம், காற்றியக்கவியல், காற்றியக்க கட்டமைப்பு மற்றும் காற்று வெப்ப அம்சங்கள், ஏவியனிக்ஸ், பாலிமர்கள் மற்றும் கலவைகள், வழிகாட்டுதல், கட்டுப்பாடு மற்றும் உருவகப்படுத்துதல், கணினி மற்றும் தகவல், இயந்திரவியல் போன்ற தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், விண்வெளி வழிமுறைகள், வாகன ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை, விண்வெளி ஆயுதங்கள், இரசாயனங்கள் மற்றும் பொருட்கள், விண்வெளி இயற்பியல் ஆய்வகம் வளிமண்டல அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விண்வெளி அறிவியல் செயல்பாடுகளில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் குறித்து அறிந்து கொண்டோம்.இந்த அறிவியல் களப்பயணம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Jul 26, 2024

Coffee With Collector” என்ற 87-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (25.07.2024) ராஜபாளையம் ரமணா சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற Coffee With Collector”   என்ற 87-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S.,  அவர்கள்  மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்  கல்வி,  பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில்  மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 87-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

Jul 26, 2024

அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில்  (25.07.2024) மாவட்ட நிர்வாகம், ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்புகள் இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான 4 நாட்கள் நடைபெறும் உண்டு, உறைவிட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டு இயற்கையையும், சுற்றுச்சுழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினார்உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிகள், பருவநிலை, தட்பவெப்பநிலை முரண்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இயற்கை மாசுபாடு அடைந்து சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தும் வகையிலும், இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,  அரசும்,  சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும், அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதனடிப்படையில், நமது விருதுநகர் மாவட்டத்தில்  மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் காடு சூழல், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சூற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திலும்,  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,   மாவட்ட நிர்வாகமும், ROAR  மற்றும் ATREE ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காடுகளைப் பற்றியும்,  வன உயிரினங்களை பற்றியும் அது சூழலுக்கும், மனித வாழ்வியலுக்கும் ஆற்றும் பங்குகளையும் எடுத்துரைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் புதிய திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஆசிரியர்களுக்கு இயற்கை விழிப்புணர்வு, மரம் வளர்த்தல், நீர்வளம் காத்தல் சார்ந்த பயிற்சி வகுப்பு 24.07.2024 முதல் 27.07.2024 வரை நடைபெறுகிறது.இன்று சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது  மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.  நெகிழி  ஒழிப்பு என்பது மிக முக்கியம். அதனை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சுற்றுசூழல் முக்கியத்துவத்தை  பற்றி நம் அனைவரிடமும் தெரிய படுத்த வேண்டும். அது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். மேலும்,  20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும்.நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல், தினசரி பயன்பாடுகளில் இருந்து நெகிழியினை எவ்வாறு குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் பயிற்சி பெற்று, அது குறித்து  மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக இது பற்றி பயிற்சி வழங்குவதன் மூலமும், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினால்  ஏற்படக்கூடிய  விளைவுகளை ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.   சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என  அனைவரும் இணைந்து மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இப்பயிற்சியில் முதல் கட்டமாக பல்லுயிர் பரவுதல் என்ற தலைப்பிலும், இரண்டாவது கட்டமாக சூழயியல் மாற்றம் என்ற தலைப்பிலும், இறுதியாக ஐந்திணைகள் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் களப்பயணம் நடைபெற உள்ளது.இந்த வகுப்பில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் ஒரு இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பயிற்சிகள் வழங்க உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், ராம்கோ பொறியியல் மற்றும் இராஜூக்கள் கல்லூரி பேராசிரியர்கள், ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 26, 2024

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (25.07.2024) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விருப்பம் உள்ள நபர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படும். புதிய எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டால் அவர்களையும் தொடர் கண்காணிப்பு செய்து பராமரிக்கவும் இவ்வாகனம் பயன்படும்.இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர்/ மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் மரு.யசோதாமணி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, காசநோய் மற்றும் குடும்ப  நலதுறையின் துணை இயக்குனர்கள் மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேலையா, மாவட்ட மேற்பார்வையாளர் திரு.அய்யனார் உட்பட அரசு அலுவலர் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 26, 2024

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளில் வீடு பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய 200 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வீடு வழங்கிட தகுதியான நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழ்கண்ட  நிபந்தனைகளுடன் விண்ணப்பம் சொந்த வீடு, நிலம் , காலியிடம் இருக்ககூடாது, வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க  வேண்டும், விண்ணப்பித்தவர்களில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்தளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இராஜபாளையம் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்கள்;, கண்டிப்பாக புது இருப்பிடத்திற்கு குடிபெயர வேண்டும். குடியிருப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.89,000 பணம் செலுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும், விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் கிடைக்கப்பெற கடைசி நாள்: 31.07.2024. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2, வருமான சான்றிதழ்) மேலும் விவரம் பெறுவதற்கு  மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068 -யை தொடர்புக்கொண்டு பயனடையுமாறும், மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 25, 2024

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நடத்தப்பட்ட சமுதாய திறன் வளர்ப்பு பயிற்சியை சிறப்பாக முடித்த நபர்களுக்கு சான்றிதழ்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (24.07.2024) தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நடத்தப்பட்ட சமுதாய திறன் வளர்ப்பு பயிற்சியை சிறப்பாக முடித்த ராஜபாளையம், காரியாபட்டி, சிவகாசி மற்றும் வட்டாரத்தைச் சார்ந்த  நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்  வீ.ப.ஜெயசீலன்,  I A S ., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

Jul 25, 2024

‘Coffee With Collector” என்ற 86-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.07.2024) சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற ‘‘Coffee With Collector”  என்ற 86-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S.,  அவர்கள்  மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில்  கல்வி,பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில்  மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 86-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, இலட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய பின்புலமோ, ஏழையா, வசதி படைத்தவரா,நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எங்கு போய் சேர்கீர்கள், உங்கள் இலட்சியத்தை எவ்வாறு அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக  உழைத்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே இங்கே யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும் போது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 69 70

AD's



More News