முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன-
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 35 நபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அப்பயிற்சியானது அந்த மாவட்டத்திலேயே நடத்தப்படும்.
இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply