தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்ஷினி,I A S,அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் ஆகியோர் (09.09.2024) அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இனாம்ரெட்டியாபட்டிஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், குழுவின் செயல்பாடுகள், அரசின் திட்டங்களை பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்கள்.
பின்னர், பட்டம்புதூர் கிராமத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட களப்பகுதி அளவிலான தையல் தொழில் குழு, விருட்சம் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் தையல் தொழில் செய்து வருவதை பார்வையிட்டு, ஆய்வு செய்து உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல், விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அதனைதொடர்ந்து, பெரிய பேராலி கிராமத்தில் விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயப் பயிர்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதை பார்வையிட்டு, தயாரிக்கும் முறைகள், உற்பத்தியின் தரம் உள்ளிட்டைவை குறித்து ஆய்வுசெய்து, உற்பத்தியினை விரிவுபடுத்துதல், அரசின் மானிய திட்டங்கள், கடனுதவிகள், சந்தைப்படுத்துதல் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பின்னர், மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதா இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பாடுகள், பணிகளின் முன்னேற்றம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை திறம்பட மேம்படுத்துதல் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்ஷினி, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
Leave a Reply