பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ,முதலமைச்சரின் பொதுநிவாரணநிதியிலிருந்து நிவாரணத்தொகைக்கான காசோலை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(05.11.2024) 5 வெவ்வேறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.
அதன்படி, சேலம் மாவட்டம் , குப்பனூர் கிராமத்தில் வெள்ளியம்பட்டி என்ற இடத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையுரணி கிராமத்தை சேர்ந்த திரு.ஜெயராமன் என்பவரின் வாரிசுதாரரான அவருடைய மகன் திரு.சங்கரலிங்கம் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும், விபத்தில் காயமடைந்த சிவகாசி வட்டம், வெற்றிலையுரணி கிராமத்தை சேர்ந்த திரு.முத்துராஜா என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும்,
வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் மெ/ஸ்.லட்சுமி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மரணமடைந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தை சேர்ந்த திரு.குருமூர்த்தி என்பவரின் வாரிசுதாரரான அவருடைய சகோதரி திருமதி சுப்புலட்சுமி என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும்,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமம், (உட்கடை) செங்கமலப்பட்டியில் இயங்கி வரும் தி/ள்.சுதர்சன் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தை சேர்ந்த திருமதி மல்லிகா என்பவரின் வாரிசுதாரரான அவருடைய தாயார் திருமதி நாகலட்சுமி என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும் மற்றும் சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருமதி இந்திரா என்பவருடைய வாரிசுதாரரான அவருடைய கணவர் திரு செல்வம் என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply