25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் உலமாக்களுக்கு மானிய விலையில் புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் உலமாக்களுக்கு மானிய விலையில் புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை உறுப்பினர் செயலர்/கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளர் உறுப்பினராகவும், மற்றும் மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட பயனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல்/விலைப்புள்ளி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வயதுச் சான்றிதழ், குடும்ப அட்டை, வயதுச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ் (குறைந்த பட்சம் 8-வது தேர்ச்சி/தோல்வி) வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC & MICR Code  விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (2வது தளம்) விருதுநகர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News