இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம்
இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தினத்தை மார்ச் 8 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடினர். பிரசிடன்ட் ஆனந்தி இவ்விழாவில் 20 பெண்களை, அவர்கள் செய்திருக்கின்ற அளப்பறிய செயல்களைப் பாராட்டி, கெளரவப் படுத்தினார்.
இராஜபாளையம் டைம்ஸ் எடிட்டர், பப்ளிஸர் ஆன கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வரும் பத்திரிகையை பாராட்டி அனைவரிடமும் அறிமுகப்படுத்தி கௌரவித்தார். அவரவர்கள் துறையில் சாதித்த எல்லா பெண்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா சியாம் சிறப்பாக பேசி ,பெண் முன்னேற வேண்டுமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் ,வேண்டவே வேண்டாம் என்றார். டாக்டர் சித்ரா அவர்கள் ,பெண் முன்னேற ஆண்கள் மட்டுமல்ல ,அப்பெண்ணிற்கும் தைரியமும், பின்வாங்கும் குணமும் இல்லாமல், தானாக முன்னேற வேண்டும் என்றார். ஆண்கள் உறுதுணை இருந்தாலும் பெண்கள் உறுதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றார். விருது பெற்ற அனைத்து பெண்களும் சிறப்பாக பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது. 5.30 மணிக்கு ஆரம்பித்த விழா 8.45 மணிக்கு நிறைவு பெற்றது. இனிய இரவு விருந்துடன் விழா நிறைவு பெற்றது.
0
Leave a Reply