25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே .

 ராஜபாளைய நகராட்சியில் மாஸ்டர் பிளான், கார்பன் நியூட்ரல் திட்டங்களின்படி நீர் நிலைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து  ஆர்.சி.எஸ் அமைப்பு, நகராட்சி சார்பில் டிஜிட்டல் கணக்கெடுப்பு துவங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை, தாமிர பரணி குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான டிஜிட்டல் தரவுகள் எடுக்கும் பணி, ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் மூலம் பள்ளி கல்லுாரி மாணவர்களை கொண்டு அலைபேசி ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

மாநில பசுமை கால நிலை ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா துவக்கினார். பி.ஏ. சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, டாக்டர் சித்ரா மாண வர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

கட்டடத்தின், வகைப்பாடு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதா?, இல்லையெனில் அதற்கான காரணம், ஆழ் துளைகுழாய் இணைப்பு உள்ளதா?, பொதுகழிப்பறை பயன்படுத்துகிறீர்களா? உள்ளிட்ட 14 வகையான கேள்விகளுடன், வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

 அதிகாரிகள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப் பதன் மூலம் பராமரிப்பு பணிகளில் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News