ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், சேத்துார்,தேவதானம் அடுத்த பகுதிகளில் வறண்ட நிலங்கள், மழை பொழிவை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளுக்கு மக்காச்சோளம் ஒவ்வொரு வருடமும் கை கொடுத்து வரும். இந்நிலையில் இந்த வருடமும் ரெட்டியபட்டி, சிவலிங்காபுரம், ஆலங்குளம், வடகரை, தென்கரை, என்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி பயிராக ஆவணி மாதம் மக்காச்சோளம் பயிரிட்டு ஒரு மாதம் நட்டு வைத்து வளர்ச்சியை எதிர்பார்த்த சூழலில் தற்போது அடுத்து வரும் கடும் வெயில் மற்றும் பொய்த்துப்போன மழையால் கருகி நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது.
கண்மாய், இரவை பாசனம் தவிர மீதி உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் உழுது ஆவணி மாத பட்டத்தில் மக்காச்சோள விதைகள் ரூ.4000, உழவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு ரூ.11,000 என ஏக்கருக்கு 15,000 என செலவிட்டும் தற்போது ஆவணி புரட்டாசி மாத மழை இல்லாததால் 15 நாட்கள் ஆன மக்காச்சோள கருதுகள் கருகிவிட்டன. கண்மாய் ஒட்டிய கிணற்று பாசன பகுதிகளில் இது ஓரளவு தண்ணீரை பாய்ச்சி தப்பித்த நிலையில் மழையை நம்பிய மக்காச்சோள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
0
Leave a Reply