இராஜபாளையம் ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா"
M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா"வில் பல பள்ளிகளில் இருந்து, நூற்றுக்கும் மேலாக மாணவர்கள் கலந்து கொண்டனர்.வைமா குழுமத்தின் Managing DirectorRtn.திருப்பதி செல்வன் கூறிய 5W 1H என்ற ஃபார்முலாசிறப்பாகஇருந்தது.மேலும்அவர்"மனிதர்களைநேசியுங்கள் ,பொருட்களைபயன்படுத்துங்கள்" என்று கூறிய வாசகம் மிகவும் கவர்ந்தது.
திருமதி.மைதிலி அவர்கள் உ.வே.சா பற்றிக் கூறிய செய்திகள் அருமையாக இருந்தது.ஆம் அந்த ஓலைச்சுவடி மட்டும் கிடைத்திருந்தால் யானைகள் பேசும் மொழியினை நாம் தெரிந்திருக்கலாம்."அரும்புகள் " அமைப்பு நிறுவனர் திரு.மதிவாணன் அவர்கள் யானைகளைப்பற்றிக் கூறும் போது அவரின் அகமும் புறமும் குழந்தையாகிப் போனது .மேலும் அவர் யானை, குழந்தை, கடல் இந்த மூன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றார்.யானை நன்றாக நீந்தும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் இது எங்கிருந்து இதனைப் பெற்றுக் கொண்டது என்ற செய்தி தான் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
யானை கடல் பசுவிலிருந்துதான் பரிணாமம் ஆகியிருக்கிறது இதன் மூதாதையர் கடல் வாழ் உயிரிகள் என்ற செய்தியை புதிதாய் அறிந்தோம்.யானைகளின் கழிவுகளில் இருந்துதான் காடு உருவாகிறது யானைகளை நம்பி 25 உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன என்பதையும் அறிந்தோம். அவ்ளோ பெரிய பிரமாண்டம் சிறிய எலியைப் பார்த்து பயந்தது என்ற செய்தி சிரிப்பினைத் தந்தாலும் யானையின் மீது பரிவு கொள்ளவே செய்தன.ஒவ்வொரு பலத்திற்குப் பின்னும் ஒரு பலவீனம் உண்டு போல அந்த பலவீனத்தை தெரிந்து கொண்டு மனிதர்கள் அதனை அடக்கி ஆள்கிறார்கள் இன்றைய கூடல் மிகப் பயனுள்ளதாக இருந்தது
0
Leave a Reply