கம்பு கேழ்வரகு போர்ன்விடா
தேவையான பொருட்கள்- கம்பு 250 கிராம், கேழ்வரகு 100 கிராம், பொரிகட்டில் 50 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், ஜீனி 250 கிராம், ஏலம் 10,கம்பு, கேழ்வரகு, பொரிகடலை, பாசிப்பருப்பு நான்கும் அரைத்தமாவு மொத்தமாக 2 டம்ளர் என்றால் ஜீனி 1 டம்ளர்.
செய்முறை -கம்பு, கேழ்வரகு இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து, உரலில் இட்டுக் குற்றி உமி நீக்கி முதல் நாள் மாலை 4 மணிக்கு தண்ணீரில் விட்டு ஊறவைத்து பின்பு வடிகட்டி, வெள்ளைத் துணியில் சுற்றி கட்டிவைத்துவிட வேண்டும். அதை எடுத்து நிழலிலேயே நன்றாக காய வைத்து அதனுடன், பொரிகடலையையும், பாசிப்பருப்பையும் (அதாவது பயறு அல்ல) லேசாக வறுத்து அதாவது கம்பு, கேழ்வரகு, பொரிகட்டில், பாசிப்பருப்பு நான்கையும் சேர்த்து கல் உரலில் இட்டு, உதிரியாக அரைக்க வேண்டும். முடியாதவர்கள் மிஷினிலும் அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு 2 டம்ளர் இருந்தால் 1 டம்ளர் ஜீனி சேர்க்கவும். மிக்ஸி வைத்திருப்பவர்கள். மாவு, அரைத்த பின் ஜீனியை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். (ஏலக்காய் தேவைப்பட்டவர்கள சேர்த்துக் கொள்ளலாம்) இல்லையெனில் வேண்டாம்.
இதை ஒரு பாட்டிலில் அடைத்து குழந்தைகளுக்கு, உதிரியாகவோ, அல்லது தண்ணீர் சேர்த்து உருண்டையாகவோ அல்லது பால்மாதிரிகாய்ச்சியோ கொடுக்கலாம். மிக்க சத்துள்ள உணவு செய்து முடிக்கு முன்பே உங்கள் வீட்டில் போர்ன்விடா வாசனை மூக்கைத்துளைக்கும், ருசியோ, நாக்கில் தேன் ஊற்றெடுக்கும்.
0
Leave a Reply