வீட்டை ஆளும் நமக்கு வீட்டுத்தலைவாசல் தான் பாதுகப்பு.
100 சதுர அடியில் இருந்தாலும் 10,000 சதுரஅடியில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு பாதுகாப்பு நிலை வாசல் கதவு தானே.அப்பேற்பட்ட நிலைவாசலை - நம்மில் பலர் சரியாக கவனித்துக் கொள்வதில்லை.ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலை 6-7 மணிக்குள் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து 2 சாமந்தி பூவாவது வாசலின் இரு புறத்தில் வைக்கவும்.முடிந்தவர்கள் வாசலில் ஒர் அகல் விளக்கு ஏற்றி 2 ஊதுபத்தி வைக்கவும்.
"பன்னீர் பச்சைகற்பூரம் சேர்த்து மஞ்சள்குழப்பிவைக்கவும்.குல தெய்வமும் மற்ற தெய்வங்களும் வரும் வழியை இப்படி தான் வைக்க வேண்டும். தினமும் வெளியில் சென்று வந்தவுடன் நிலை வாசலின் மேற்பகுதியை தொட்டு நல்ல படியாக வீடு வந்து சேர்ந்ததற்கு நன்றி சொல்லவும்.தினமும் தூங்கி எழுந்தவுடன் கதவு திறக்கும் போது நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்து பாதுகாப்பாய் இருந்ததற்குநன்றி என்று சொல்லிப் பாருங்கள். முன்னேற்றத்தைக் கண்கூடாக பார்க்கலாம்.
0
Leave a Reply