25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


காமன்வெல்த் பதக்க வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் பதக்க வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்தது.

பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தாங்கள் வென்ற பதக்கங்களை பிரதமரிடம் காண்பித்தனர்.

வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, இந்தியாவை தொடர்ந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி வரவேற்றது பெருமையாக இருந்ததாகவும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News