சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் திராட்சை
கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும். சிறுநீர் பையில் ஏற்படும் கற்கள், வீக்கம், கட்டிகளாலும் உடல் உபாதைகள் உண்டாகும்.திராட்சை பழத்தை கொண்டு சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, கட்டிகளை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:- திராட்சை பழம், வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில்10 திராட்சை பழங்களை போடவும்.இதை லேசாக நசுக்கவும். இதனுடன் சிறிது வேப்பங்கொழுந்து, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி எடுக்கவும். இந்த தேனீரை காலை, மாலை வேளைகளில்50 முதல்100 மில்லி வரை குடித்துவர கல்லீரல், மண்ணீரல், கணையம்,சிறுநீர் பை ஆகியவற்றில் ஏற்படும் கட்டிகள் கரையும். வலி விலகிப் போகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பன்னீர், பச்சை என அனைத்து வகை திராட்சைகளையும் பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம்.திராட்சை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
0
Leave a Reply