மகாளய அமாவாசை தினம்
புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். இந்த ஆண்டுக்கான மகாளய பட்சம் (11) முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை மகாளய பட்சம். இந்த 15 நாட்கள் அடங்கிய புண்ணிய தினத்தில் எந்த நாளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும்.ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள், முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த தினத்தில் அரச மரத்தை சுற்றிவந்து கணபதியை வணங்கி வருவது அமாவாசை நாட்களில் காகம், எறும்பு, பசு, நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தல் ,கருப்பு உளுந்து, கருப்பு எள், உப்பு, உடைகள், வெல்லம், பார்லி போன்ற உணவு பொருட்களை தானமாக அளித்தல், தண்ணீர் தானம் கொடுப்பதும், குடிக்க இனிப்பு கலந்த தண்ணிரைப் பருக கொடுப்பதும், சிவ பெருமான் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வருவது,எப்போதும் ஏழை, எளியோரை தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக்கூடாது. நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.
முன்னோர்களை வணங்குவதுகுல தெய்வ இறைவனை வணங்குவதும் சிறப்பான விஷயம் தான்.ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து அந்த தீபத்தைப் பார்த்து வணங்குவது மிகவும் நல்லது.மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். மகாளய அமாவாசை தினத்தில் நற்காரியங்களை செய்து இறைவனின் அருளும், முன்னோர்களின் அருளும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
0
Leave a Reply