மாற்றுத் திறனாளிகளுக்கான விர் டஸ் உலக தடகள சாம் பியன்ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 20' பிரிவு) போட்டியில் இந்திய வீராங்கனை புவி அகர்வால் பங்கேற்றார். இதில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற் றினார்.புவிஅகர்வால் 100,200,400 மீ.,ஓட்டத்தில் ,3 வெள்ளிவென்றார். தொடர்ந்துகுண்டுஎறிதலில்பங்கேற்றபுவிஅகர்வால், வெள்ளி வசப்படுத்தினார். புவி அகர்வால். ஒரு தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கம் வென்றார் .
மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 24.62 வினாடிநேரத்தில் வந்து, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். விர்டஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை ஆனது. முன்னதாக 25.01 வினாடி நேரத்தில் ஓடியது முதலிடத்தில் இருந்தது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தீப்தி, தங்கம் வென்றிருந்தார். இதையடுத்து நடப்பு சீசனில் தீப்தி வென்ற இரண்டாவது தங்கம் .
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 40 வது சீசன், சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2026ல் அமெரிக்காவில் நடக்கவுள்ள ஜூனியர் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறலாம்.தமிழகத்தின் தான்யா16 வயதுக்கு உட்டோருக்கான (பெண்கள்) நீளம் தாண்டுதலில், 4.23 மீ., தாண்டி தங்கம் வென்று, ஜூனியர் அரங்கில் புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2024ல் அனன்யா, 4.05 மீ., தாண்டியதே அதிகமாக இருந்தது. தவிர, 2 முதல் 4 வரையிலான இடங்களை பெற்ற திக் ஷா (4.11, ஹரியானா), அனாமிகா (4.08, கேரளா), கின்ஜல்பென் (4.07, குஜராத்)என மூவரும் தேசிய சாதனை படைத்தனர்.தமிழகத்தின் அபிநாத் 16 வயது ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதலில் (4.94 மீ.,) புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார். தமிழகத்தின் விஷ்ணு (31.74 வினாடி), குருதீப் (352.02) என இருவரும் 400 மீ., தடை ஓட்டத்தில் தங்கம், வெள்ளி கைப்பற்றினர். 4X400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் (20 வயதுக்கு உட்பட்ட) தமிழகத்தின் ஸ்ரீநிவாஸ், சக்தி ஸ்ரீ, விஷ்ணு, அக்ஸ்லின் கூட்டணி (3:32.76 நிமிடம் ) வெள்ளிப்பதக்கம் வென்றனர்.தமிழகத்தின் பிரித்திகா (400 மீ., தடை ஓட்டம், 1:02.79 நிமிடம்), உவின் (800 ., ஆனந்தன் 1:50.60 நிமிடம்), அம்பி ரியஷ் (உயரம் தாண்டுல், 1.96 மீ.,), வெண்கலப் பதக்கம் வென்றனர். தமிழகத்தின் யுவராஜ் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான டிரிபிள்ஜம்ப்' போட்டியில் (15.61 மீ.,) தங்கமும் ,பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில்சுபா தர்ஷினி (24.35) வெள்ளியும் வென்றனர்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் , இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது.இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேற்று ஐந்தாவது நாள்ஆட்ட முடிவில் ,இந்திய அணி இரண்டாவது இன்னிங் சில் 124/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
.கடந்த 2012, லண்டன் ஒலிம்பிக்ஒற்றையரில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம்வென்ற முதல் இந்தியரானார், வீராங்கனை செய்னா நேவல் 35.. அடுத்து உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2015 (வெள்ளி), 2017 ல் (வெண்கலம்) பதக்கம் வென்றார்.2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தார். காமன் வெல்த் விளையாட்டில் 2 முறை (2010, 2018) தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர். பாட்மின்டனில் இருந்து விலகஉள்ளார் .எதிர்காலத்தில் பயிற்சியாளராக வருவது குறித்து முடிவெடுக்கவில்லை. விளையாடுவதை விட இது கடினமானது. தினமும் 10 முதல் 15 மணி நேரம் மைதானத்தில் நின்று, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்
ஆசிய கால்பந்து 10வது சீசன், பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) 2026ல் சீனாவில் (ஏப்.30மே17) நடக்கஇருக்கும் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன.இந்திய அணி 'ஜி' பிரிவில் உஸ்பெகிஸ் தான், கிர்கிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் அணி, இந்திய கிர்கிஸ்தானை சந்தித்தது. முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது.இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண் டாவது பாதியில் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் இந்திய அணி கேப்டன் ஜுலன் நாங்மய்தெம் (90+1), ஒரு கோல்அடித்து ,முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்) அர்ஜுன் (கேரளா) ஜோடி, ஜப்பானின்யுடோநோடா, ஷுன்யாஓடாஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 21-13,. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-6 என வசப்படுத்தியது. 29 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் இந்திய ஜோடி 21-1 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.இந்தியவின் ஹரிஹரன் அம்ச கருணன், திரீஷா ஜோடி, இந்தோனேஷியாவின் நாஹ்யா முக்யிபா, நவாப் ஜோடியை கலப்பு இரட்டைய பிரிவு பைனலில் சந்தித்தது. இந்திய ஜோடி 52 நிமிடம் நடந்த பைனலில் 21-14, 18– 21, 21-11 என வென்று கோப்பை வென்றது.
சர்வதேச ஸ்குவாஷ் சாலஞ்சர் பி.எஸ்.ஏ., தொடர் ஜப்பானில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 117வது இடத்திலுள்ள இந்தியாவின் 39 வயது ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்துபெற்ற எகிப்தின் ஹயா அலியை எதிர் கொண்டார்.முதல் செட்டில் 11-5 , 2 வது செட்டில் 11-9 , ஜோஷ்னா,மூன்றாவது செட்டில் ஹயா அலி (11-5) வென்றார். 4வது செட்டை ஜோஷ்னா 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார்.போட்டியி ன் முடிவில் ஜோஷ்னா 3-1 (11–5,11-19, 5-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
பெண்களுக்கான இந்தியன் ஓபன் கோல்ப் தொடர் ஹரியானாவில் நடந்தது.இந்தியாவின் ஹிட்டாஷீபக்சி, 283 'ஸ்டிரோக்' பெற்று, மூன்றாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனவி (284) 4வது இடம் பெற்றார். சிங்கப்பூரின் ஷனான் (281), இங்கிலாந்தின் அலைஸ் (282) முதல் இரு இடம் பெற்றனர்.பிரைம் வாலிபால் லீக், நான்காவது சீசன் இந்தியாவின் ஐதராபாத்தில் நடக்கிறது.மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டி யில் ஆமதாபாத் அணி 3-2 என்ற (9:15, 7:15, 15:9, 15:11, 15:8) கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் டில்லி அணி 3-0 என (15:11, 15:9, 15:11) கேரளா (கோழிக் கோடு) அணியை வென்றது. இன்று ஓடென்ஸ் நகரில் டென்மார்க்ஓபன் பாட்மின்டன் தொடர் துவங்குகிறது. இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பெண்கள் ஒற்றையரில்அன்மோல், ஆண்கள் இரட்டையரில் ச சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகின்றனர்.
சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ஜப்பானில், பெண்கள் ஒற்றை யர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் நார்டைன் கராஸ் மோதினர். சிறப்பாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11–8, 15-13, 11–9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்குள் நுழைந்தார். எகிப்து வீராங்கனை ராணர் இஸ்மாயிலை ஜோஷ்னா, எதிர் கொள்கிறார்.