சர்வதேச பாட்மின்டன் .
சர்வதேச பாட்மின்டன் தொடர்மக்காவ் நகரில் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), இந்தோனேஷியாவின் ஷிகோ ஆரா('நம்பர் 48') மோதினர் முதல் செட்டை 21,14 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 1421 என இழந்தார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 21-17 என வசப் படுத்தினார். முடிவில் லக்சயா 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்...
மற்றொரு போட்டியில் தரவரிசையில் 47 வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண்,15வது இடத்திலுள்ள ஹாங்காங்கின் சியுக் லீயை சந்தித்தார்.. முடிவில் தருண் 19,21/,21,14,/22,20 என போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆதித்யா 18,21,/16,21 என மலேசியாவின் ஹோவிடம் தோற்றார். இந்தியாவின் ரக்ஷித்தா (தமிழகம்) பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 21-14, 10-21, 11-21 என தாய்லாந்தின் புசானிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் குமகை, நிஷி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 10-21, 22-20, 21-16 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
0
Leave a Reply