டென்னிஸ் ஜார்ஜியாவில் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, பிரிட்டனின் ஒயிட்ஹவுஸ், டாம் ஹேண்ட்ஸ் ஜோடியை சந்தித்தது.58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. பாட்மிண்டன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்,'சூப்பர்500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றினார்., 3வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த்22,20 என போராடி தன்வசப்படுத்தினார். ஒரு மணிநேரம்,14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில்நடக்கிறது. பெண்களுக்கான ஸ்கீட் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில்லான்,116 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் ரைசா, 51 புள்ளியுடன், இரண்டாவது இடம் பெற்று. வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான50 மீ., ரைபிள்3 பொசிசன்ஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர்(588)4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பெரும்பாலான நேரத்தில்4வது இடத்தில் இருந்த அட்ரியன், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட,446.6 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வசப்படுத்தினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
MAY 23-ம் தேதி லக்னோவில், லக்னோ, பெங்களூர், ஹைதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 231/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 189/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ISHAN KISHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.
MAY 22-ம் தேதி குஜராத்தில், லக்னோ, குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 235/2 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 202/9 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MITCHELL MARSH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாட்மின்டன் 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர் லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோலீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.அடுத்து நெதர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாடுகிறது. அதன்பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர் கொள்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார். குத்துச்சண்டைதாய்லாந்து ஓபன் தொடருக்கான (மே 24 ஜூன் 1),19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நிகில், அமித் குமார், தீபக், யாசிகா, தமன்னா உள்ளிட்டோர் தேர்வாகினர்.
MAY 21-ம் தேதி மும்பையில், டெல்லி, மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 180/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 121/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SURYAKUMAR YADAV தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துப்பாக்கி சுடுதல் ஜூனி யர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர்பிஸ்டல் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கானக் (572), பிராச்சி (571) 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் ராஷ்மிகா (566) 14, சான்ஸ்கிருதி (565) 15வது இடம் பிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட கானக், 239 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.இந் தியாவின் பிராச்சி (176) ஐந்தாவது இடம் மட்டும் பிடித்தார்.இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி என 2 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்னிஸ் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, நியூசிலாந்தின் அஜீத் ராய், லாட்வியாவின் ராபர்ட் ஜோடியை சந்தித்தது.முதல் செட் 5-5 என இழுபறி ஆனது. பின் இந்திய ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. ஹாக்கிநான்கு நாடுகள் பங்கேற்கும் தொடருக்காக (மே 25 - ஜூன் 2) ஜூனியர் இந்திய பெண்கள் அணி, அர்ஜென்டினா சென்றது. இதில் உருகுவே, சிலி அணிகளும் விளையாடுகின்றன.
MAY 20-ம் தேதி டெல்லியில், ராஜஸ்தான், சென்னை,அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 187/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AKASH MADHWAL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 30. உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த இவர், 2023, ஹாங்சு (சீனா) ஆசிய விளையாட்டு 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். அடுத்து 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார்.தோகா டைமண்ட் லீக் போட்டியில் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை (9 நிமி டம், 13:39 வினாடி), படைத்தார்.இவரை கவுரவிக்கும் வகையில் உ.பி., மாநில அரசு 'டி. எஸ்.பி.,' பதவி வழங்கியது. மொரதா பாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் போலீஸ் அகாடமியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், பயிற்சிக்காக பெங்களூரு தேசிய அகாடமிக்கு பாருல் சவுத்ரி கிளம்பினார்.
டென்னிஸ் மே 25-ஜூன் 8ல் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒற்றையர் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 141 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மிட்செல் குருகரை சந்தித்தார்.காலிறுதியில் நடந்த முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சுமித் நாகல், அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் டில் வெற்றி பெற்றார். பாட்மின்டன்மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' தொடர் கோலாலம்பூரில் நடக்கும் தகுதி சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹூவாங் யுவை (சீன தைபே )வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார். துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. ஆண் களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியா சார்பில் அட்ரியன் கர்மாகர் பங்கேற்றார். இவர் 2010 டில்லி காமன்வெல்த் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் ஜோய்தீப் கர்மாகரின் மகன் சிறப்பாக செயல்பட்ட அட்ரியன்,மொத்தம் 626.7 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் ஜெஸ்பெர் (627.0) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ரோஹித் (620.2) 12, நிதின் வேதாந்த் (614.4) 35வது இடம் பெற்றனர்.பெண்களுக்கான 50 6., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 623.5 புள்ளி மட்டும் பெற, 6வது இடம் தான் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை பிராச்சி (618.3) 24 வது இடம் பிடித்தார். இதுவரை ஒரு வெள்ளி மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
MAY,19ம் தேதி லக்னோவில், ஹைதராபாத், லக்னோ,அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 206/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABHISHEK SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.