25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விளையாட்டு (SPORTS)

Jan 23, 2025

இலங்கை அணியை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. கோலாலம் பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இலங்கை அணிகள் மோதின 'டாஸ்' வென்ற இலங்கை அணி பீல் டிங்' தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது. இலங்கை அணி 20 ஓவரில் 9 விக் கெட்டுக்கு 59 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரி வில் முதலிடம் பிடித்து 'சூப்பர்-6' சுற்றுக்குள் நுழைந்தது.  

Jan 23, 2025

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.

கோல்கட்டாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது 'டி-20' போட்டி, நாளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தனர். 7 ஆண்டுக்குப் பின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 'டி-20' போட்டியில்  இந்திய அணி விளையாட உள்ளது

Jan 22, 2025

விளையாட்டுக்கள்

குளிர்கால விளையாட்டு “கேலோ இந்தியா' 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்கும் ,'கேலோ இந்தியா' குளிர்கால விளை யாட்டு லடாக்கில்,  இன்று துவக்கம். 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்பு. ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஹாக்கி இந்தியா லீக்  போட்டியில் பெங்கால் அணி வெற்றிஹாக்கி இந்தியா லீக் போட்டி ராஞ்சியில்  நடைபெற்றது  .போட்டியில் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டில்லியை வீழ்த்தியது. இது, பெங்கால் அணியின் 2வது வெற்றியானது.   CRIKET முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி வெற்றிஅபிஷேக் சர்மா 20 பந்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண் டாவது 'டி-20' போட்டி, வரும் 25ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.

Jan 21, 2025

செஸ் ( CHESS )

இந்தியாவின் குகேஷ், அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் காருணா, நகமுரா, சீனாவின் வெய் யி  நார்வே செஸ் தொடரில் (மே 26 ஜூன் 6) பங்கேற்கின்றனர். 

Jan 21, 2025

வைஷ்ணவியின் சிறந்த ஆட்டம் T-20 உலக கோப்பை லீக் போட்டியில், இளம் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன்  மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான நடக்கிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மலேசியா இந்தியா, அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.மலேசிய அணி 14.3 ஒவரில் ரன்னுக்கு 31 'ஆல்-அவுட்' ஆனது. நார் அலியா, நசதுல் ஹிதாயா தலா 5 ரன் எடுத்தனர்  இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 5. ஆயுஷி சுக்லா 3 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணிக்கு  திரிஷா (27* ரன். பவுண்டரி), கமலினி (4 கைகொடுக்க, 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இந்தியாவின் வைஷ்ணவி சர்மா வீசிய 14வது ஓவரின் 2வது பந்தில்  நூர் ஐன் பிந்தி (3) அவுட்டானார். தொடர்ந்து வைஷ்ணவி, அடுத்த இரு பந்தில் நுார் இஸ்மா டானியா (0), சிடி நஸ்வாவை (0) வெளியேற்றி 'விக்கெட் சாய்த்தார். இவர், 4 ஓவரில், 5 ரன் மட்டும் விட்டுக் கொடுத்து விக்கெட் கைப்பற்றினார். இதில் 93 'மெய்டன் ஓவர் அடங்கும். இது, பெண்கள் 14-20 உலக கோப்பை (19 வயது) அரங்கில் பதிவான சிறந்த பந்து வீச்சானது.. 

Jan 21, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பை வென்றது.

இலங்கையில் மாற்றுத் திறனாளிகளுக் கான சாம்பியன்ஸ் டிராபி ('14-20') கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து என 4 அணிகள் பங்கேற்றன. நேற்று, கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு யோகேந்திர படோரியா (73 ரன், 40 பந்து, 5 சிக்சர், 4 பவுண் டரி ) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன் குவித்தது.கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து , அணி 118 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந் தது. இந்தியா சார்பில் ராதிகா பிரசாத் 4/19 (3.2 ஓவர்), விக்ராந்த் கேனி 2/15 (3 ஓவர்), ரவிந்திர சாண்டே 2/24 (4 ஓவர்) விக்கெட் சாய்த்தனர். பைனலில் 79 ரன் வித்தி யாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.கோப்பை வென்ற இந்திய அணி, லீக் சுற்றில்  கோப்பை வென்று இங்கிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.  

Jan 20, 2025

இந்தியாவின் பிரக்ஞானந்தா நெதர்லாந்து செஸ் தொடர் இரண்டாவது சுற்றில் வெற்றி .

நெதர்லாந்தில் 'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் (கிளாசிக்கல்) நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவை சந்தித்தார். இப்போட்டி 43 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணாவை எதிர் கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய பிரக்ஞானந்தர், 55 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு முடிவில் சுற்று காருணர் (அமெரிக்கா), குகேஷ், நாடிர்பெக் (அஜர்பெய் ஜான்), பிரக்ஞானந்தா தல 1.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளனர். .

Jan 20, 2025

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.

மலேசியாவில், பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, நைஜீரியா அணிகள் மோதின. மழை, ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக தலா 13 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப் பட்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. நைஜீரியா அணிக்கு லில்லியன் உதே (18), கேப்டன் லக்கி பியட்டி (19) ஓரளவு கைகொடுத் தனர். 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது..நியூசிலாந்து அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 63 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந் தது. இத்தொடரில் அறிமுகமான முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.ஆட்ட நாயகி விருதை நைஜீரியாவின் லக்கி பியட்டி கைப்பற்றினார். 

Jan 20, 2025

நீரஜ் சோப்ராவுக்கும்,டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோர் திருமணம்

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 27.  2021, டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்தவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் கில் வெள்ளி வென்றார். ஹரியானாவை சேர்ந்த இவர், ஹிமானியை 25, காதலித்து வந்தார். ஹிமானி மோர் தேசிய அளவில்டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அமெரிக்காவின் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலையில், விளையாட்டு மேலாண்மை படித்து வருகிறார். இங்கு தான் நீரஜ் சோப்ரா, ஹிமானியை முதன் முதலில் சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள விரும்பிய நீரஜ், குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கினார். இவர்களது திருமணம், இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜன. 14-16 ல் நடந்தது. 

Jan 19, 2025

கோ கோ' பெண்களுக்கான பைனலில், ஆண்களுக்கான பைனலில் இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.

லீக் சுற்றில் மூன்று போட்டியிலும் (எதிர்: தென் கொரியா, ஈரான், மலேசியா) வென்ற இந்தியா, காலிறுதியில் வங்கதேசம், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது.  நேற்று நடந்த பெண்களுக்கான பைனலில் நேபாளத்தை வீழ்த்தி, இந்திய அணி 78-40 என்ற புள்ளி கணக்கில் 38 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் ஆனது.லீக் சுற்றில் 4 போட்டி யிலும் (எதிர்: நேபாளம், பிரேசில், பெரு, பூடான்) வென்ற இந்தியா, காலிறுதியில் இலங்கை, அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. ஆண்களுக்கான பைனலில் இந்திய அணி 54-36 என்ற கணக்கில் 18 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று ,மீண்டும் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.

AD's



More News