நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.. வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவரில் 44 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா 3, ஆயுஷி சுக்லா, ஜோஷிதா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, சானிகா சல்கே ஜோடி கைகொடுத்தது. 4.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கமலினி (16). சானிகா (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன் கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜெசி அனே, ஜெசிக்கா பெய்ல்லா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 6-4 என அன்கிதா ஜோடி கைப் பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.இதை அன்கிதா ஜோடி 10-8 என கைப்பற்றி முடிவில் அன்கிதா 4 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் மச்சாக் மோதினர். தாமஸ் ('நம்பர் -25') 2 மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் ஜோகோ விச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளி தாக வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி. பிரான்சின் மிலடினோவிச், குரோஷியாவின் இவான் டோடிச் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம். 12 நிமிடம் நடந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றனர். .
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், 'நம்பர்-16' ஆக உள்ள இந்தியாவின் சிந்து தொடர்ந்து 4 'கேமை' இழந்த சிந்து, 17-21 என கோட்டை விட்டார் சிந்து. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் யோங் ஜின், மின் காங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-10, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
டில்லியில் பெண்களுக் கான ஐ.டி.எப்., டென் னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியா வின் அன்கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ரியா பாட்யா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை அன்கிதா ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. முடி வில் அன்கிதா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
நெதர்லாந்தில் டாடா சர்வதேச செஸ் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் 'உலகசாம்பியன்' குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, வைஷாலி, திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டென்னிஸ் . இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி ,தடை தாண்டி 16 மாதத்திற்கு பின் களமிறங்கினார் டில்லி டென்னிஸ் தொடரில் களமிறங்கியது மகிழ்ச்சி," என்றார்பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து இந்திய ஓபன் சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, 'நம்பர்-16' ஆக உள்ள சிந்து, 46வது இடத்திலுள்ள ஜப்பானின் மனாமி சுய்ஜுவை எதிர் கொண்டார்.முதல் செட்டை சிந்து 21-15 என வசப்படுத்தினார்.தொடர்ந்து அடுத்த செட்டையும் இவர், 21-13 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார் .
அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ‘நம்பர்-2’ வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), இத்தொடரின் ‘நம் பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் தரேக் மோமெனை எதிர் கொண்டார். 27 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வேலவன், 0-3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். காலிறுதியில் மனுஷ் தோல்வி .ஓமனில், உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் மனுஷ்ஷா, ஜப்பானின் சோராவை வீழ்த்தினார். முடிவில் மனுஷ் 0-3 கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இந்தியாவில் பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் - செப்டம்பரில் நடக்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 'டாப்-4' அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.இதற்குதயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி, சொந்த மண்ணில் பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் (3-0), அடுத்து அயர்லாந்து (3 - 0) அணிகளுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா .. இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு 2025ம் ஆண்டினை சிறப்பானதாக மாற்றுவோம் ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை .
ஜார்க்கண்ட்டில் பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. 4 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ், பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. போட்டி 1-1 என சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. முடிவில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.