சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் தேவதானம் சாஸ்தாகோவில் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு கருதி வனத்துறை தடை விதித்தது.தொடர் மழையால் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் நிறைந்து கண்மாய்களுக்கு நீர் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் முட்செடிகள்:
பிரச்சனை: நான்கு வழிச்சாலையில் வன்னியம்பட்டி முதல் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் வரை சாலையின் இருபுறமும் கருவேல முட்செடிகள் வெள்ளைக் கோடு வரை நீண்டு வளர்ந்துள்ளன.
பாதிப்பு: இருசக்கர வாகன ஓட்டிகளின் கண் மற்றும் முகத்தில் செடிகள் பட்டு காயங்கள் ஏற்படுவதுடன், இரவு நேரங்களில் விபத்துகளும் நேரிடுகின்றன.
கோரிக்கை: முட்செடிகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Leave a Reply