தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தேசிய விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஓட்ட பந்தயம்
தமிழக வீரர் ராகுல் குமார் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் (21.06 வினாடி), நிதின் (21.07) இரண்டு, மூன்றாவது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன. ஒடிசா வீரர் அனிமேஷ் (20.58) தங்கம் வென்றார். தமிழகத்தின் தீபிகா, பெண்களுக்கான 'ஹெப் டத்லான்' போட்டியில், வெண்கலம் கைப்பற்றினார்.
தமிழகம் 74 பதக்கங்கள் வென்று, முதலிடத்தில் உள்ளது.
தேசிய விளையாட்டில் இதுவரை தமிழகம் 21 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கம் வென்று, 6வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி (49 தங்கம், 18 வெள்ளி, 19 வெண் கலம் என 86) முதலிடத்தில் உள்ளது.
டென்னிசில் தங்கம்
தமிழகத்தின் அக்ஸ் பத் ரிநாத், லட்சுமி பிரபா ஜோடி,டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில், 6-4, 6-1 என கர்நாடகாவின் நிக்கி, சோகா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது. குஜராத்தின் ஜாவியாவை சர்வீசஸ் வீரர் இஷாக் இக்பால், 3-6, 6-4, 7-6 என வென்று, தங்கம் வென்றார்.
குஜராத்தின் வைதேகி பெண்கள் ஒற்றையர் பைனலில், 6-4, 6-4 என நேர் செட்டில் மகாராஷ்டிராவின் ஜீல் தேசாயை வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
அரையிறுதியில் வீழ்ந்த ஆமோதினி (கர்நாடகா), ஆகான்ஷா (மகா ராஷ்டிரா), வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
9 பேரும் சாதனை
11 பேர் பங்கேற்ற ,பெண்களுக்கான 10 கி.மீ., நடை பந்தயம் நேற்று நடந்தது.2 பேர் பாதியில் விலகினர். ஹரியானாவின் ரவினா (45.52 நிமிடம்), தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். அடுத்து வந்த உத்தரகாண்ட் வீராங்கனைகள் ஷாலினி (46.12), บយល់ (47.36), மான்சி (48.32), உ.பி.,யின் முனிதா (46.23), ரேஷ்மா (48.16), மோகவி (46.23, தமிழகம்), சேஜல் (49.33 மகா ராஷ்டிரா), மோனிகா (51.45, ஹரியானா) என 8 பேரும் தேசிய சாதனை படைத்தனர்.
தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக் கிறது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற் றினார்.
தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹு தீன், 16.01 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவின் முகமது முஹாசின் (15.57 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
0
Leave a Reply